உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

எருமப்பட்டி:எருமப்பட்டி அருகே, பொட்டிரெட்டிப்பட்டியில் அகில இந்திய கட்டுநர் சங்க, நாமக்கல் மையம் மற்றும் விவேகானந்தா மருத்துவ கல்லுாரி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு, கட்டுநர் சங்க தலைவர் தென்னரசு தலைமை வகித்தார். இதில், பொது மருத்துவம், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, மகளிர் நல மருத்துவம், கண் பரிசோதனை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், 500க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !