மேலும் செய்திகள்
விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
26-Aug-2024
ப.வேலுார்: ப.வேலுாரில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ப.வேலுார் மற்றும் கிராம பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பின் நுாற்றுக்கு மேற்பட்ட சிலைகள், ப.வேலுாரில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று, காவிரி ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்காக, விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.பல வண்ணங்களில், 3 அடியில் இருந்து, 12 அடி வரையிலான சிலைகள் இங்கு தயாரித்து விற்பனை செய்கின்றனர். விநாயகர் நின்ற நிலையிலும், சிங்க முகம், யானை, எலி, காளை, மான் மீது அமர்ந்த விநாயகர் என பல வடிவ சிலைகள், 100க்கும் மேற்பட்ட வடிவில் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைத்துள்ளனர். கல் மாவு, பேப்பர் மாவு, கிழங்கு மாவு போன்ற பொருட்களில் தயாரிக்கப்படும் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சிலை நுாறு ரூபாயில் இருந்து, 22,000 ரூபாய் வரை விற்பனைக்கு உள்ளது.
26-Aug-2024