லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கருட சேவை
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம், லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நடந்த கருட சேவை நிகழ்ச்சியில், ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.சேந்தமங்கலம், லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், 16ம் ஆண்டு கருட பஞ்சமி விழா கடந்த, 20ல் தொடங்கியது. லட்சுமி நாராயண பெருமாள், பெரிய திருவடி கருடாழ்வாருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதையொட்டி, நேற்று முன்தினம் பெருமாளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டதுடன், ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் அணிந்த மாலை மற்றும் வஸ்திரம் நான்கு மாட வீதியில் பவனி வருதல் நிகழ்ச்சியும், இரவு திருப்பதி பிரமோற்சவ விழாவில் கருட சேவையில் நடப்பது போல், வரதராஜபெருமாளுக்கு ஸ்ரீஆண்டாள் நாச்சியார் மாலை அணிவிக்கப்பட்டு, கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.