உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.9 லட்சத்திற்கு ஆடு விற்பனை

ரூ.9 லட்சத்திற்கு ஆடு விற்பனை

எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிமை வாரச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு பவித்திரத்தை சுற்றியுள்ள காவக்காரன்பட்டி, முட்டாஞ்செட்டி, நவலடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். வார துவக்கத்தில் நடக்கும் சந்தை என்பதால் முசிறி, தொட்டியம், துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கறிக்கடைகளுக்கு, ஆடுகளை வாங்கி செல்ல வந்து செல்கின்றனர். நேற்று புரட்டாசி மாதத்தையொட்டி பவித்திரத்தில் நடந்த ஆட்டு சந்தைக்கு வியாபாரிகள் வரத்து குறைந்ததால், 9 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை