உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இ.பி.எஸ்., பிறந்த நாளில் ஜி.ஹெச்.,ல் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

இ.பி.எஸ்., பிறந்த நாளில் ஜி.ஹெச்.,ல் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

பள்ளிப்பாளையம்: நாமக்கல் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி வெளியிட்ட அறிக்கை: அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான இ.பி.எஸ்.,சின், 71-வது பிறந்த நாள் விழா, இன்று நாமக்கல் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக, பள்ளிப்பாளையம் காவிரி கரையோரம் உள்ள முருகன் கோவிலில், இன்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜை, யாகம் நடக்க உள்ளது. அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட உள்ளது. பின், ஆவாரங்காட்டில் கட்சிக்கொடி ஏற்றி, இனிப்பு வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து, அங்குள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.முக்கியமாக, இ.பி.எஸ்., பிறந்தநாளில் அரசு மருத்துவ மனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும், பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில், போர்வை, மருத்துவ உபகரணம், பால், பிரட், பிஸ்கட் வழங்கப்பட உள்ளது. தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நடந்த ரத்த தான முகாமில் ஏராளமான இளைஞர்கள், ரத்த தானம் வழங்கினர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ