உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஜார்க்கண்ட் செல்லும் வாத்து தமிழகத்தில் விலை கிடுகிடு

ஜார்க்கண்ட் செல்லும் வாத்து தமிழகத்தில் விலை கிடுகிடு

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், மோகனுார், எல்லைக்காட்டுப்புதுார், பாலப்பட்டி, மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் வாத்துக்கறி மிகவும் பிரபலம். இப்பகுதி மக்கள் வாத்துக்கறியை இறைச்சிக்காக அதிகளவில் பயன்படுத்துகின்றனர். தற்போது, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், வாத்துக்கறி விலை அதிகரித்துள்ளது.இதுகுறித்து, நாமக்கல் மாவட்டம், மோகனுாரைச் சேர்ந்த வாத்துக்கறி கடை உரிமையாளர் பிரபாகரன் கூறியதாவது:தமிழகத்தில், தஞ்சை, கடலுார், விழுப்புரம், சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், வாத்து பண்ணைகள் அமைத்து உற்பத்தி செய்யப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், வாத்துக்கறி நுகர்வு அதிகரித்துள்ளதால், இங்கிருந்து வாத்துகள் அதிகளவில் சப்ளை செய்யப்படுகிறது. அதனால், தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது, தேவை அதிகரிப்பால், விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.சில மாதங்களுக்கு முன், ஒரு வாத்தின் கொள்முதல் விலை, 200 ரூபாயாக இருந்தது. அதை வாங்கி கிலோ, 250 ரூபாய் வரை விற்பனை செய்தோம். தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தற்போது, 300 ரூபாய்க்கு வாங்கி, 350 முதல், 400 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். வாத்து முட்டை 10 ரூபாய்க்கு கொள்முதல் செய்து 15 ரூபாய்க்கு விற்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ