மேலும் செய்திகள்
கோவை அரசு கல்லுாரி முன் ஆசிரியர் கழகம் போராட்டம்
07-Aug-2025
ராசிபுரம், ராசிபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புபட்டை அணிந்து வாயில் முழக்க போராட்டம் நடத்தினர். ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியில் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வாயில் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.பணியில் மூத்த அரசு கல்லூரி ஆசிரியரை, கல்லூரி கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும். முனைவர் பட்டம் பெறாத அனைவருக்கும் இணை பேராசிரியர் பணி வழங்க வேண்டும். அரசு கல்லூரியில், காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் ஐயந்துரை தலைமையில் நடந்தது.
07-Aug-2025