மாநில கோ-கோ போட்டிக்கு அரசு பள்ளி மாணவியர் தேர்வு
நாமகிரிப்பேட்டை: மாநில அளவிலான கோ-கோ போட்டிக்கு, நாமகிரிப்பேட்டை அரசு பள்ளி மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.முதல்வர் கோப்பை, மாவட்ட அளவிலான பெண்களுக்கான கோ-கோ விளையாட்டு போட்டி, கடந்த மாதம், திருச்செங்கோடு தனியார் கல்லுாரியில் நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடிய மாணவியரை தேர்வு செய்து, மாநில அளவிலான போட்டிக்கு அனுப்ப உள்ளனர். நாமகிரிப்பேட்டை அரசு பள்ளி மாணவி நிஷா, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்-பட்டுள்ளார். தேர்வு பெற்ற மாணவியை தலைமை ஆசிரியை சத்-தியவதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பழகன், இயக்-குனர்கள் செந்தில், கிருஷ்ணன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர், பயிற்சியாளர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.