மேலும் செய்திகள்
கல்லுாரி ஆண்டு விழா
18-Mar-2025
நாமக்கல்: நாமக்கல் பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களின் அங்கமான கலை அறிவியல் கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, வேளாண்மை கல்லுாரி, நர்சிங் கல்லுாரி, பார்மசி கல்லுாரி மற்றும் கல்வியியல் கல்லுாரிகளின் பட்டமளிப்பு விழா நடந்தது.தாளாளர் கணபதி வரவேற்றார். கல்வி நிறுவனங்களின் தலைவர் நிறுவனர் பழனி ஜி பெரியசாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, ஜோகோ நிறுவனத்தின் தலைவர் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு, மாணவர்களுக்கு பட்டம் வழங்கி, வெற்றி ரகசியங்களை பகிர்ந்து கொண்டார். வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் நிறுவன தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, மாணவர்களின் எதிர்கால திட்டமிடுதல் குறித்து எடுத்துரைத்தார். விழாவில், 1,200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்றனர். சென்ற ஆண்டு பல்கலை அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு, கார்த்திகேயன் சென்னிமலை அவார்ட், பழனிக்கவுண்டர் பழனியம்மாள் அவார்ட், எ.சிமுத்தையா அவார்ட், வி.ஐ.டி., விஸ்வநாதன், பழனி ஜி பெரியசாமி அவார்ட், விசாலாட்சி பெரியசாமி அவார்ட் போன்ற பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இறுதியில் கல்லுாரி முதன்மையர் பெரியசாமி நன்றி தெரிவித்தார்.
18-Mar-2025