வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Higher education is not necessary for most jobs. Only those who have aptitude for academics should pursue tertiary education. Trade skills will be more useful to the nation.
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், 2023-24 மற்றும் 2024-25ம் கல்வியாண்டில், பிளஸ் 2 படித்த மாணவ, மாணவியர் அனைவரையும் உயர்கல்விக்கு செல்வதை உறுதி செய்ய, கலெக்டர் தலைமையில், கல்லுாரி கனவு, உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை (கட்டணமில்லா தொலைபேசி எண்: 18004251997, வாட்ஸாப் எண்: 9788858794) சிறப்பு குறைதீர் முகாம் என, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களால், உயர்கல்விக்கு செல்ல இயலாத மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். ஆலோசனைகள் தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்படும். உயர்கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம், இன்று மாலை, 3:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.கலெக்டர் உமா தலைமை வகிக்கிறார். இதுவரை உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள், சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்கள், பொருளாதாரம் உட்பட பல்வேறு காரணங்களால் உயர்கல்விக்கு செல்ல இயலாத மாணவர்கள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான உதவி, வழிகாட்டுதல்கள் பெற்று பயனடையலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Higher education is not necessary for most jobs. Only those who have aptitude for academics should pursue tertiary education. Trade skills will be more useful to the nation.