உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இன்று குரூப்--2 தேர்வு: கேள்வித்தாளுக்கு பாதுகாப்பு

இன்று குரூப்--2 தேர்வு: கேள்வித்தாளுக்கு பாதுகாப்பு

ராசிபுரம்: தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் குரூப்-2 தேர்வுக்கான தேர்தல், இன்று மாநிலம் முழுவதும் நடக்கவுள்ளது. இதையடுத்து தேர்வு எழுதுபவர்களுக்கு, தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு ஹால் டிக்கெட்டும் ஆன்லைனில் டவுன் லோடு செய்து வருகின்றனர்.தேர்வுக்கான வினாத்தாள்கள் தேர்வாணையம் மூலம், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் உள்ள கருவூலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பியுள்ளனர். ராசிபுரம் தாலுகாவில், 20 மையங்களில், 6,000க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதவுள்ளனர். இவர்களுக்கான கேள்வித்தாள்கள் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டது. 63 பெட்டிகளில் பாதுகாப்பாக மூடப்பட்ட ஆட்டோவில் வந்தது. போலீஸ் பாதுகாப்புடன் கேள்வித்தாள் பெட்டிகளை இறக்கி கருவூலத்தில் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ