உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தல்

வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தல்

குமாரபாளையம்: மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில், தண்ணீர் திறந்து விட விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து, தட்டாங்குட்டை ஊராட்சி, வட்டமலைக்காடு விவசாயி ரவி கூறியதாவது: ஆண்டுதோறும் ஜூலை முதல், ஜனவரி வரை நெல் நடவு பாசனத்திற்காக, மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்தாண்டு நெல் அறுவடை முடிந்து, தற்போது வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் அடுத்து எள், சோளம், நிலக்கடலை பயிர்கள் நடவு செய்வதற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !