கைத்தறி கண்காட்சி விற்பனை துவக்கம்
நாமக்கல், நாமக்கல்லில், 1-1 வது தேசிய கைத்தறி தின விழாவில், சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கப்பட்டது.நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடந்த துவக்கவிழாவுக்கு, கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம், மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி.,ராஜேஸ்குமார், சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்கி வைத்து பேசினார்.தொடந்து முத்ரா கடன் திட்டத்தில், 33 நெசவாளர்களுக்கு, 16.50 லட்சம் ரூபாய் கடனுதவி, சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில், 12 பயனாளிகளுக்கு, 13.10 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் நலத்திட்ட உதவிகளையும், கைத்தறி ஆதரவு திட்டத்தில், 5 கைத்தறி நெசவாளர்களுக்கு, 1.47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தறி உபகரணங்கள் என, 31.08 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். துணை மேயர் பூபதி, உதவி இயக்குனர் கைத்தறித்துறை காமராஜ், கைத்தறி நெசவாளர்கள் சங்க தலைவர்கள், உறுப்பினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.