உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மணல் திட்டாக காணப்பட்ட காவிரியில் பரவலாக தண்ணீர் செல்வதால் மகிழ்ச்சி

மணல் திட்டாக காணப்பட்ட காவிரியில் பரவலாக தண்ணீர் செல்வதால் மகிழ்ச்சி

மோகனுார், மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், வறண்டு மணல் திட்டாக காணப்பட்ட மோகனுார் காவிரி ஆற்றில் பரவலாக பாய்ந்து செல்கிறது.சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் ஆண்டுதோறும், குறுவை நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். அதன்படி, கடந்த, 12ல், தமிழக முதல்வர் ஸ்டாலின், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டார். காலை, 10:00 மணிக்கு, 3,000 கன அடி திறக்கப்பட்டது. தொடர்ந்து, மதியம், 12:00 மணிக்கு, 5,000, மாலை, 4:00 மணிக்கு, 7,000, இரவு, 8:00 மணிக்கு, 10,000 கன அடி என, படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.தற்போது, தினமும், 10,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அவ்வாறு திறந்துவிடப்படும் தண்ணீர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டம் வழியாக, பூம்புகாரில் கலக்கிறது.இந்நிலையில், தண்ணீரின்றி வறண்டு பல மாதங்களாக மணல் திட்டாக காணப்பட்ட மோகனுார் காவிரி ஆறு, மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிட்டதை அடுத்து, பரவலாக பாய்ந்து செல்கிறது. அதன் மூலம், கிராம பஞ்., டவுன் பஞ்., நகராட்சி, மாநகராட்சி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. அகண்ட காவிரியில், தற்போது தண்ணீர் செல்வதை பலரும் வந்து பார்த்து செல்கின்றனர். குறிப்பாக, மோகனுார் - வாங்கல் காவிரி பாலத்தில் நின்று பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ச்சியடைகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ