உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாவட்டம் முழுவதும் 12 நாட்களில் 540.80 மி.மீ., மழை பதிவால் மகிழ்ச்சி

மாவட்டம் முழுவதும் 12 நாட்களில் 540.80 மி.மீ., மழை பதிவால் மகிழ்ச்சி

நாமக்கல், மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, 12 நாட்களில், 540.80 மி.மீ., மழை பெய்துள்ளது. இது, விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழையும், பல்வேறு இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைக்கிறது. அதன் காரணமாக, புழுக்கம் ஏற்பட்டு, சிறுவர் முதல், முதியவர்கள் வரை அனைவரும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதற்கிடையில், இரவு நேரங்களில், ஆங்காங்கே கனமழையும், லேசான மழையும் பெய்து வருகிறது. மழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்படுகிறது.மேலும், மழை காரணமாக, வெப்பம் தணிந்து, குளிர்ந்து காற்று வீசுவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக, கடந்த, 12 நாட்களில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், லேசான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. கடந்த, 12 நாட்களில் 540.80 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.கடந்த, 1ல், 19.80 மி.மீ., 2ல், 99.20, 7ல், 22.50, 10ல், 147.60, 11ல், 188.20, நேற்று, 63.50 என, மொத்தம், 540.80 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இது, விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை