சாலையோர பள்ளத்தில் சாய்ந்த கனரக வாகனம்
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் பஸ்ஸ்டாண்டு அருகில், சேலம்-திருச்செங்கோடு நெடுஞ்சாலையில், கடந்த ஓராண்டாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் நடக்கிறது.இப்பணிகளுக்காக, குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், பொக்லைன் உதவியுடன், பெரிய பள்ளம்தோண்டி குழாய்களை பதித்து வருகின்றனர். பள்ளத்தை சரிவர மூடாததால், நேற்று மாலை சேலத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கிசென்ற கனரக ரிக் வாகனம் பள்ளத்தில் பதிந்தது. அப்போது, அருகில் பயணிகள் நிழற்கூடத்தில் பஸ்சுக்காக காத்திருந்த மக்கள், வாகனம் தங்கள் மீது சாய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் அலறியடித்து ஓடினர். நீண்ட நேரத்திற்கு பிறகு பள்ளத்தில் சாய்ந்த வாகனம் மீட்கப்பட்டது. எனவே, குழாய்கள் பதிக்க தோண்டிய பள்ளத்தை, முறையாக சமன்செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.