மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி, இலைத்தீயள் நோய் தாக்கம் கட்டுப்படுத்த தோட்டக்கலை துறை அறிவுரை
'மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி, இலைத்தீயள் நோய் தாக்கம்'கட்டுப்படுத்த தோட்டக்கலை துறை அறிவுரை ஈரோடு, டிச. 4-ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி, இலைத்தீயள் நோய் தாக்குதல் தென்படுவதால், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.இதுபற்றி தோட்டக்கலை துணை இயக்குனர் மரகதமணி, செய்திக்குறிப்பில் கூறியதாவது:மாவட்டத்தில், 10,400 ஏக்கரில் மஞ்சள் பயிர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது நிலவும் அதிக ஈரப்பதமான காலநிலையால், மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி, இலைத்தீயள் நோய் தாக்கம் பரவலாக காணப்படுகிறது.இலைப்புள்ளி நோய் பாதித்த செடிகளின் இலைகளில் வட்ட, நீள் வட்ட வடிவ சிறு புள்ளிகள், மஞ்சள் நிறத்தில் தோன்றும். இப்பள்ளிகளின் மையத்தில் சிறு கரும்புள்ளிகள் காணப்படும். நோய் தாக்கம் அதிகரித்தால், இலைகள் காய்ந்து கருகி காணப்படும்.இந்நோயை கட்டுப்படுத்த வயலை சுத்தமாகவும், வடிகால் வசதியுடன் பராமரிக்க வேண்டும். நோய் அறிகுறி தென்பட்டதும், காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது மேன்கோசெப் என்ற பூஞ்சாண கொல்லியை, 2.5 கிராம், ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.இலைத்தீயன் நோய் பாதித்த இலைகளின் மேல், கீழ் பகுதியில், 1 - 2 மி.மீட்டர் அளவு செம்பழுப்பு நிறத்தில் எண்ணற்ற புள்ளிகள் காணப்படும். நோய் தாக்கம் அதிகரித்தால், இப்பள்ளிகள் இணைந்து திட்டாகி, இலை காய்ந்துவிடும்.நோய் அறிகுறி தென்பட்டதும், மானகோசெப் அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு என்ற பூஞ்சாணை கொல்லஙயை, 2.5 கிராம் வீதம் ஒரு லிட்டர் நீரில், 15 நாள் இடைவெளியில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.அங்கக முறையில் உயிர் பூஞ்சாண கொல்லியான சூடோமோனாஸ் புளுரசன்ைஸ ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் மக்கிய தொழு உரத்துடன் கலந்து, கடைசி உழவின்போது இட வேண்டும். சூடோமோனாஸ் புளுரசன்ஸ் திரவ உயிர் கொல்லியை, 2 மி.லி., - ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, 15 நாள் இடைவெளியில் தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.