உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராமதாஸ்-அன்புமணி குறித்து கருத்து சொல்ல தகுதியில்லை

ராமதாஸ்-அன்புமணி குறித்து கருத்து சொல்ல தகுதியில்லை

சேலம், ''பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி பற்றி கருத்து சொல்ல எனக்கு தகுதியில்லை,'' என, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் கூறினார்.சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ.,சதாசிவம், நேற்று கலெக்டரை சந்தித்து பேசினார்.அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மேட்டூர் அனல்மின் நிலையத்தில், ஆய்வு மேற்கொண்ட மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணனிடம், அனல்மின் நிலையத்தால் சுகாதார சீர்கேடு, அதிகாரிகள் கவனக்குறைவால் அடிக்கடி விபத்து நடப்பதை தெரிவித்தேன். மேட்டூரில் மின் உற்பத்தி நடந்தும், மேட்டூர், கொளத்துார் பகுதிகளுக்கு, மும்முனை மின்சாரம் கிடைப்பதில்லை. 1.10 லட்சம் பேர் வசிக்கும் எங்கள் பகுதிக்கு போதுமான மின்வசதி கிடைப்பதில்லை. 100 ஏரி திட்டத்தில் இதுவரை, 50 ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளன. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களை பற்றி கருத்து சொல்ல எனக்கு தகுதியில்லை. விரைவில் இருவரும் ஒன்று சேருவர். பா.ம.க., முன்னேறினால் தான், தமிழகம் முன்னேறும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ