உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இளையபெருமாள் கோவில் சித்திரை தேரோட்டம்

இளையபெருமாள் கோவில் சித்திரை தேரோட்டம்

திருச்செங்கோடு, திருச்செங்கோடு அடுத்த இறையமங்கலத்தில், இளையபெருமாள் சுவாமி என்னும் பிரசன்ன வெங்கடரமண சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சித்திரை தேர் திருவிழா, கடந்த, 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி, நேற்று மாலை நடந்தது. முதலில் ஆஞ்சநேயர் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. தொடர்ந்து, பூதேவி, ஸ்ரீதேவி சமேத இளைய பெருமாள் தேர் வடம் பிடித்து பக்தர்கள் இழுத்து வந்தனர். மலையை சுற்றி தேர் வலம் வந்தபோது பக்தர்கள் உப்பு, வெல்லம், நிலக்கடலை, மாம்பழம், வாழைப்பழம், கத்தரிக்காய் போன்றவற்றை தேர் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். தேர்த்திருவிழாவில், திருச்செங்கோடு, கரூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருச்செங்கோடு டி.எஸ்.பி., கிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ