உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலை செம்மேட்டில் தீயணைப்பு நிலையம் திறப்பு

கொல்லிமலை செம்மேட்டில் தீயணைப்பு நிலையம் திறப்பு

கொல்லிமலை செம்மேட்டில்தீயணைப்பு நிலையம் திறப்புசேந்தமங்கலம், அக். 10-கொல்லிமலை செம்மேட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு நிலையத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சியில் திறந்து வைத்தார்.கொல்லிமலை, செம்மேட்டில் தீயணைப்பு நிலையம் உள்ளது. இந்த தீயணைப்பு நிலையம், 1990 முதல் கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. இதையடுத்து, தீயணைப்பு நிலையத்திற்காக புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதனால், 1.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தீயணைப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.இந்த கட்டட பணிகள் முடிந்ததையடுத்து, முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து, எம்.எல்.ஏ., பொன்னுசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். சேலம் மண்டல துணை இயக்குனர் கல்யாண்குமார், மாவட்ட அலுவலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி