மேலும் செய்திகள்
பள்ளிப்பாளையத்தில் நாய் தொல்லை அதிகரிப்பு
23-May-2025
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம், வெப்படை சுற்று வட்டார பகுதியில், கடந்த சில மாதங்களாக போதை மாத்திரை புழக்கம் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச், 31ல், பள்ளிப்பாளையம், வெப்படை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த, 10க்கும் மேற்பட்டவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஏப்., 14ல், பள்ளிப்பாளையத்தில், இரண்டு பேரை கைது செய்து, 220 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அதேபோல், வெப்படை அருகே, பச்சாம்பாளையம் பகுதியில், கடந்த, 31ல், இரண்டு பேரை கைது செய்த போலீசார், 40 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.பள்ளிப்பாளையம், வெப்படை போலீசார் தொடர் நடவடிக்கை எடுத்து வந்தாலும் போதை மாத்திரை புழக்கம் அதிகரித்தபடியே உள்ளது. எனவே, போதை மாத்திரை புழக்கத்தை கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23-May-2025