மேலும் செய்திகள்
நின்றிருந்தவர் மீது டூவீலர் மோதி 3 பேர் படுகாயம்
11-Jul-2025
குமாரபாளையம்: குமாரபாளையம் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி, பழைய பாலம் அடைக்கப்பட்டது.காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், குமாரபாளையம் மணிமேகலைதெரு முதல், காவேரி நகர் வரை அனைத்து படித்துறைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், பொதுமக்கள் ஆற்றுக்கு செல்லக்கூடாது என, அறிவு-றுத்தி வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி, காவிரி பழைய பாலம் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டது. இதனால் பவானி, குமாரபாளையம் செல்லும் பொதுமக்கள், சேலம்-கோவை புறவழிச்சாலை வழியாக, பல கி.மீ., துாரம் சுற்-றிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.உணவு வசதி வழங்கப்படுவதுடன், மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். வருவாய்த்துறையினர், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
11-Jul-2025