வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆசிரியர் பிரபாகரனை வேலையில் இருந்து நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கப்படவேண்டும்
வெண்ணந்துார், வெண்ணந்துார் அருகே, அளவாய்ப்பட்டி பஞ்., ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், கடந்த, 2ல், ஆசிரியர் பிரபாகரன், 'குடி'போதையில் வந்து பள்ளி வளாகத்தில் இருந்த குடிநீர் குழாயை உடைத்துள்ளார். மேலும், மாணவர் சேர்க்கைக்கு வந்த பெற்றோரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதை கண்டித்து, நேற்று முன்தினம் மாணவர்களின் பெற்றோர் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, நேற்று வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் தலைமையில் பள்ளி வளாகத்தில் பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.அப்போது, வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் கூறியதாவது:பள்ளிக்கு, 'குடி'போதையில் வந்த ஆசிரியர் பிரபாகரன் குறித்து நாளிதழில் செய்தி வெளியானது. உடனடியாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் பிரபாகரன், வெண்ணந்துார் பகுதியில் செயல்படும் தொடக்க பள்ளிக்கு தற்காலிக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது உரிய முறையில் விசாரணை நடத்தி, மேலதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பர். பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க உரிய முறையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர், மாணவர்களை பற்றி கவலைப்படாமல் அரசு பள்ளிக்கு அனுப்பி வைக்க முன்வர வேண்டும். மாணவர்களின் கல்வித் திறன் உயர ஆசிரியர்கள் உரிய முறையில் பாடம் எடுப்பார்கள். பள்ளியின் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியர் பிரபாகரனை வேலையில் இருந்து நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கப்படவேண்டும்