மேலும் செய்திகள்
புகையிலை பதுக்கிய வியாபாரி கைது
24-Jun-2025
பள்ளிப்பாளையம், ஈரோடு மாவட்டம், அரச்சலுாரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம், 40; பெயின்டர். இவர், பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு, நேற்று முன்தினம் மாலை வந்துள்ளார். 'குடி'போதையில் வந்த சண்முகசுந்தரம், பள்ளிப்பாளையம் பிரிவு சாலைக்கு வரும்போது, போதை தலைக்கேறியதால் அங்கேயே மட்டையாகி கிடந்தார். அவர் கொண்டு வந்த பையில், உடைகள், அடையாள அட்டை, 28,000 ரூபாய் ரொக்கம், 25,000 ரூபாய் மதிப்புள்ள புதிய மொபைல் போன் மற்றும் குடித்துவிட்டு பாதி வைத்திருந்த மது பாட்டில் உள்ளிட்டவை இருந்தன. சண்முகசுந்தரம் கொண்டு வந்த பை, தனியே கிடைப்பதை கண்ட அங்கிருந்த சுமை துாக்கும் தொழிலாளர்கள், பையை திறந்து பார்த்தபோது உள்ளே பணம், மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை பலமுறை எழுப்பியும், எழுந்திருக்கவில்லை. இதையடுத்து, பையை எடுத்து பத்திரமாக வைத்திருந்த தொழிலாளர்கள், நேற்று காலை, பள்ளிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போதை தெளிந்த சண்முகசுந்தரத்தை, போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து போலீசார், 'கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இப்படி, 'குடி'போதையில் தவற விடுகிறாயே; உன் குடும்பத்திற்கு செலவு செய்தால் என்ன' என அறிவுரை கூறி, பையை ஒப்படைத்து அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
24-Jun-2025