உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு கலை கல்லுாரியில் அறிமுக பயிற்சி முகாம்

அரசு கலை கல்லுாரியில் அறிமுக பயிற்சி முகாம்

குமாரபாளையம், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு அறிமுக பயிற்சி முகாம், முதல்வர்(பொ) சரவணாதேவி தலைமையில் நடந்தது. அடிப்படை உரிமைகள், தனிமனித உரிமைகள், சமூக உரிமைகள், மாணவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் உயர்கல்வியை மேம்படுத்தும் திட்டமான தமிழ்ப்புதல்வன் திட்டம் பற்றியும், பயன் பெற்றோர் பற்றியும், அதனை பெற வேண்டிய வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் பற்றியும் கூறப்பட்டது. மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், அதன் துவக்கம், பயன்கள், பெற வேண்டிய வழிமுறை, சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் ஆகியவற்றை பற்றி கூறப்பட்டது.உடல் நலன், மன நலன், சமுக நலன் மற்றும் மூச்சு பயிற்சியின் நன்மைகளை பற்றியும் கூறப்பட்டது. சித்த மருத்துவமும், அதன் பயன்களும் பற்றி எளிமையான முத்திரைகள் மற்றும் ஆசனங்கள் மூலம் எவ்வாறு நோயை குணப்படுத்தலாம் என்பது பற்றியும் கூறப்பட்டது. இதில் அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் சுகந்தி, பேராசிரியைகள் பத்மாவதி, கார்த்திகேயனி, கோமதி, சுமதி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி