அரசு மானியத்தில் பட்டு நெசவு இயந்திரம் பெற அழைப்பு
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:மத்திய அரசின் ஜவுளித்துறையின் கீழ், பெங்களூருவில் இயங்கி-வரும், மத்திய பட்டு வாரியத்தின் மூலம், சில்க் சமாக்ரா- 2 என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் பட்டு கைத்தறி தொழிலில் புதிய தொழிற்நுட்பங்-களை புகுத்தி, பட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும் மற்றும் நெசவாளர்களின் நெசவு பணியை எளிமைப்படுத்தி, பட்டு கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்ப-டுத்தும் வகையிலும், 5-வது நிதிக்குழுவில் பட்டு நெசவுத் தொழி-லுக்கான இயந்திரங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானி-யத்துடன் நெசவாளர்களுக்கு மிகக்குறைந்த விலையில் வழங்கப்-படுகிறது.மேலும், மானிய விலையில் வழங்கப்பட உள்ள பட்டு நெசவுத் தொழிலுக்கான இயந்திரங்கள், அவற்றின் விலை மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானியம் மற்றும் பட்டு உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகை விகிதம் ஆகிய விபரங்களுக்கு, குமாரபாளையம் தாலுகா, எலந்தக்குட்-டையில் உள்ள, கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 8300031750 என்ற எண் மூலமோ அல்லது yahoo.com(mailto:adhand yahoo.com) என்ற இமெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.