உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஜல் சக்தி அபியான் திட்டப்பணி கூட்டம்

ஜல் சக்தி அபியான் திட்டப்பணி கூட்டம்

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 'ஜல் சக்தி அபியான்' திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மத்திய கண்காணிப்பு அலுவலர் அஜித், தொழில்நுட்ப அலுவலர் பரமசிவம், மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், வனத்துறை, ஊரக வளர்ச்சி, வேளாண், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள மற்றும் செயல்ப-டுத்தப்படும் நீர் மேலாண் தொடர்பான பணிகள் குறித்து விளக்கப்பட்டது. முன்னதாக, மத்திய கண்காணிப்பு அலுவலர் அஜித், மத்திய தொழில் நுட்ப அலுவலர் பரம-சிவம் ஆகியோர், பரமத்தி தாலுகா, கோலாரம் பஞ்., தொடக்கப்பள்ளியில், மரக்கன்று நடவு செய்தனர். மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, மாநக-ராட்சி, நகராட்சி கமிஷனர்கள், டவுன் பஞ்., அலு-வலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ