உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சேந்தமங்கலம் அருகே இன்று ஜல்லிக்கட்டு

சேந்தமங்கலம் அருகே இன்று ஜல்லிக்கட்டு

சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே, பச்சுடையாம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா குழு சார்பில், ஜல்லிக்கட்டு போட்டி இன்று (25) நடக்கிறது. சில வாரங்களுக்கு முன், வாடிவாசல் அமைக்கும் பணி துவங்கியது. இதையடுத்து, வாடிவாசலில் காளைகள் வரிசையில் நிற்பதற்காக தடுப்பு, பார்வையாளர் தடுப்பு, கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ஜல்லிgfகட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக, நாமக்கல், எருமப்பட்டி, திருச்சி, துறையூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வர டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாடுபிடி வீரர்கள், 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இவர்களை சுழற்சி முறையில், வாடிவாசலில் விழா குழுவினர் அனுமதிப்பர். மாடு பிடி வீரர்களுக்கு விழாக்குழு சார்பில் பேன், கட்டில், பீரோ, பிரிட்ஜ், தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ