உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கஸ்துாரிபா காந்தி கல்லுாரியில் காமராஜர் பிறந்தநாள் விழா

கஸ்துாரிபா காந்தி கல்லுாரியில் காமராஜர் பிறந்தநாள் விழா

ராசிபுரம், ராசிபுரம் அடுத்த மசக்காளிப்பட்டி கஸ்துாரிபா காந்தி பார்மசி கல்லுாரியில், முன்னாள் முதல்வர் காமராஜரின், 123வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார்.முதல்வர் அசோக்குமார் முன்னிலை வகித்தார்.காமராஜர் உருவப்படத்திற்கு கல்லுாரி நிர்வாகிகள், மாணவ, மாணவியர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். காமராஜரின் சாதனைகள் குறித்து தலைவர் சிதம்பரம் மாணவர்களுக்கு கூறினார். அதேபோல், மற்ற ஆசிரியர்களும், காமராஜர் கல்விக்கு ஆற்றிய பணிகள் குறித்து நினைவு கூர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை