உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கரூர் ஆர்.எம்.எஸ்., தபால் சேவையை இடமாற்ற வேண்டாம் என கோரிக்கை

கரூர் ஆர்.எம்.எஸ்., தபால் சேவையை இடமாற்ற வேண்டாம் என கோரிக்கை

நாமக்கல்: பா.ஜ., டில்லி தமிழ்வாழ் மக்கள் தலைவர் தண்டபாணி, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா-விடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கரூரில் இயங்கி வரும் ஆர்.எம்.எஸ்., அலுவலகம், 200க்கும் மேற்-பட்ட கிராம அஞ்சல் அலுவலகங்களில் இருந்தும், 34 துணை தபால் நிலையங்களில் இருந்தும், 3 டெலிவரி இல்லாத அஞ்சல-கங்களில் இருந்தும், கரூர், குளித்தலை தலைமை தபால் நிலை-யங்களில் இருந்தும், வரும் கடித மூட்டைகளை பிரித்து, மாவட்டம், மாநிலம், வெளிநாடு வாரியாக பிரித்து அனுப்பும் பணியை மேற்கொண்டுள்ளது.கரூர் ஆர்.எம்.எஸ்., அலுவலகம், கரூர் தேர்வீதியில், 1980 மார்ச், 31ல், தொடங்கப்பட்டது. 44 ஆண்டுகளாக மக்கள் சேவையாற்றி வரும் ஆர்.எம்.எஸ்., தபால் நிலையம் மூடப்படுவது, கரூர், நாமக்கல் மாவட்ட மக்களுக்கு பெரிய இழப்பு. அதனால், கரூரில் செயல்படும் ஆர்.எம்.எஸ்., தபால் நிலையத்தை, தொடர்ந்து கரூரி-லேயே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.இதேபோல், மத்திய இணையமைச்சர் முருகன், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை