உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கேதாரகவுரி பூஜை துவக்கம்

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கேதாரகவுரி பூஜை துவக்கம்

திருச்செங்கோடு:திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், சிவனும், பார்வதியும் ஒரே உருவமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். பார்வதி தேவி, சிவபெருமானிடம் விரதம் இருந்து இடப்பாகம் பெற்றதாக ஐதீகம். இதற்கான கேதார கவுரி விரத வழிபாட்டு விழா, புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளயபட்ச அமாவாசைக்கு முனதினம், 21வது நாளாக வருமாறு கணக்கிட்டு பூஜைகள் துவங்கி நடத்தபடுவது வழக்கம். 21 நாட்களும், 21 விதமான பட்சனங்கள் படையலிட்டு பஞ்சாசனம், தபசு வழிபாடு செய்யப்படும். நேற்று துவங்கி செப்., 20 வரை, 21 நாட்கள் கேதார கவுரி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். அதன்படி நேற்று நடந்த பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ