உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எக்ஸல் பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

எக்ஸல் பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

குமாரபாளையம்: குமாரபாளையம் எக்ஸல் பப்ளிக் பள்ளியில் படித்த மழலைய-ருக்கு பட்டமளிப்பு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது. எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் நடேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மதன்கார்த்திக், எக்ஸல் பப்ளிக் பள்ளி இயக்-குனர் காவியரசி மதன்கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்-தனர். சிறப்பு விருந்தினரான சமூக ஆலோசகர் பிரியா நவீன் பங்-கேற்றார். அவர், ''குழந்தைகளை ஆக்கப்பூர்வ சிந்தனை உடையவர்களா-கவும், ஆளுமை பண்புகளை வளர்க்கவும், சுய சிந்தனை மிக்க புதிய தலைமுறையாக வளர பெற்றோரும், ஆசிரியர்களும் சேர்ந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.விழாவின் சிறப்பம்சமாக, நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் முடிவு வரை அனைத்தையும் குழந்தைகளே தொகுத்து வழங்கியது, அனைவரின் பாராட்டையும் பெற்றது. நிகழ்ச்சியில், குழந்தைகள் தங்கள் அனுபவங்களையும், மகிழ்ச்சிகளையும் சிறு நாடகம் வாயிலாக வெளிப்படுத்தினர். பள்ளி முதல்வர் சந்தானமோகன், துணை முதல்வர் செல்வமணி, ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரி-யர்கள், பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை