பொட்டணம் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா
சேந்தமங்கலம் :சேந்தமங்கலம் அடுத்த பொட்டணம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவானது ஆவணி மாதத்தில் வரும் ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று கிருஷ்ணர் சுவாமிக்கு பால், தேன் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, குதிரை வாகனத்தில், பல வண்ண பூக்கள் அலங்காரத்தில், மேளதாளம் முழங்க சுவாமி திருவீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.