உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் வித்யா கணபதி ஆலய கும்பாபிஷேகம்

விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் வித்யா கணபதி ஆலய கும்பாபிஷேகம்

திருச்செங்கோடு, :திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா கணபதி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம், முதற்கால யாக பூஜை மங்கள இசையுடன் துவங்கியது. நேற்று காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. சந்தியாக சக்கரவர்த்தி தேவி உபாசகர் ஸ்ரீ அதர்வன பிரத்யங்கார பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சாம்பசிவ ரிஷிஸ்வரர், கும்பாபிஷேக பூஜைக்கு தலைமை ஏற்று நடத்தினார். ஆலய நிர்மான ஷ்தபதி வாஸ்து சாஸ்திரி மற்றும் எண் கணித வல்லுனர் ஸ்ரீமான் பசுவராஜூ நல்லாசியுடனும் கும்பாபிஷேகம் நடந்தது.விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் கருணாநிதி, நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, துணை நிர்வாக இயக்குனர் அர்த்தநாரீஸ்வரன், துணை செயலாளர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், துணை தாளாளர் கிருபாநிதி, இயக்குனர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குனர் குப்புசாமி, முதன்மை நிர்வாகி சொக்கலிங்கம், ஆராய்ச்சி இயக்குனர் பாலகுருநாதன், திறன் மேம்பாட்டு இயக்குனர் குமாரவேல், செயல் அலுவலர் ராஜேந்திரன், அட்மிஷன் இயக்குனர் சவுண்டப்பன், அனைத்து கல்லுாரிகளின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை