தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் குறிஞ்சி பள்ளி மாணவி முதலிடம்
நாமக்கல், டிச. 24-மாநில அளவிலான தமிழ் இலக்கிய திறனறி தேர்வில், குறிஞ்சி பள்ளி மாணவி முதலிடம் பிடித்தார். தமிழக அரசால், மாணவர்களுக்கான தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு போட்டி நடந்தது. இப்போட்டியில், மாநில அளவில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். குறிப்பாக, நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவி சாருப்பிரீத்தி, 100க்கு, 96 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்து, தமிழக அரசின் கல்வி உதவித்தொகை பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சாதனை மாணவியை, குறிஞ்சி பள்ளி தாளாளர் தங்கவேல் பரிசளித்து வாழ்த்தினார். பள்ளி இயக்குனர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.