மேலும் செய்திகள்
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வந்தது அழைப்பு
20-Mar-2025
நாமகிரிப்பேட்டை: மத்திய அரசின் தொழிலாளர் நலவாரியம் மூலம் உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் சார்பில், மத்திய அரசின் தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர் பதிவு செய்வது மற்றும் ஐந்து லட்ச ரூபாய் காப்பீட்டு அட்டை புதுப்பித்தல், 70 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு, ஐந்து லட்ச ரூபாய் காப்பீடு அட்டை பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளை, நேற்று இலவசமாக செய்து கொடுத்தனர். தலைவர் வேணுகோபால் தொடங்கி வைத்தார். செயலாளர் காமராஜ், பொருளாளர் வெங்கடாஜலம், துணை செயலாளர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வயதானவர்கள், தொழிலாளர்கள் என மொத்தம், 30க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து பயனடைந்தனர்.
20-Mar-2025