மேலும் செய்திகள்
வண்டல் மண் எடுத்த டிராக்டர் பறிமுதல்
20-Sep-2024
நாமக்கல்: 'நாமக்கல் மாவட்டத்தில், ஏரிகள், குளங்களில் இலவசமாக எடுக்கப்பட்ட வண்டல் மண்ணால், 1,200 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்துள்ளது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 28 குளங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள, 88 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் வண்டல் மண் எடுப்பதன் மூலம், நீர்நிலைகளை ஆழப்படுத்தி நீர் சேகரிப்பு கொள்ளளவை அதிகரிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தையும் அதிகரிக்க முடிகிறது.இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, நஞ்சை நிலமாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு, 75 கன மீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால், 90 கன மீட்டரும் வண்டல் மண் எடுத்து கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தற்போது வரை, 3,664 விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியின் அடிப்படையில், 2,883 விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க தாசில்தாரால் அனுமதிக்கப்பட்டுள்ளது.நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள நீர்நிலைகளில் இருந்து நாளது தேதி வரை, 37 லட்சத்து, 8,600 ரூபய் மதிப்பிலான, 37,086 கன மீட்டர் வண்டல் மண் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் பராமரிப்பில் உள்ள நீர்நிலைகளில் இருந்து, 52 லட்சத்து, 74 ஆயிரத்து, 100 ரூபாய் மதிப்பிலான 52,741 கன மீட்டர் வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்காக எடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஏரிகள், குளங்களில் இருந்து, 89 ஆயிரத்து, 827 கன மீட்டர் வண்டல் மண் இலவசமாக எடுத்து, 1,200 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயனடைந்துள்ளது.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
20-Sep-2024