உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி; உயிர் தப்பிய ஆடுகள்

மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி; உயிர் தப்பிய ஆடுகள்

அந்தியூர்: பர்கூர் மலைப்பாதையில் ஆடுகளை ஏற்றி வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக ஆடுகளுடன் டிரைவர் உயிர் தப்பினார்.ஈரோட்டை சேர்ந்தவர் சண்முகம், 42; கர்நாடகா மாநிலம் ராமபுரத்தில், ஆடுகளை விலைக்கு வாங்கி கொண்டு, ஈரோட்டுக்கு டிப்பர் லாரியில் புறப்பட்டார். பர்கூர் மலைப்பாதை வழியாக நேற்று காலை லாரி வந்தது. பர்கூர் வனப்பகுதி முதல் சுலோப் அருகே எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் கவிழ்ந்தது. அனைத்து ஆடுகளும், டிரைவரும் காயமின்றி தப்பினர். விபத்து நடந்த சிறிது நேரத்தில் லாரியை மீட்டு, ஆடுகளை மாற்று வண்டியில் ஏற்றி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி