உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மறைந்த தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு

மறைந்த தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு

ராசிபுரம், சேந்தமங்கல் சட்ட சபை தனித்தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., பொன்னுசாமி நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி உள்பட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தி சென்றனர். இந்நிலையில், இன்று அவரது இறுதி சடங்கு நடக்கவுள்ளது. இது குறித்து மாவட்ட செயலர் ராஜேஸ்குமார் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மறைந்த சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., பொன்னுசாமியின் இறுதி சடங்கு இன்று (24ம் தேதி) மதியம், 12:00 மணியளவில் கொல்லிமலையில் உள்ள அவரது தோட்டத்தில், உரிய அரசு மரியாதையுடன் நடைபெறும். இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் உட்பட அரசு அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை