மேலும் செய்திகள்
எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்
26-Jan-2025
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி சங்கம், குளோபல் அகா-டமி ஆப் எக்சலன்ஸ் சார்பில், ரோேபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவில் அனுபவ கற்றல் பயிற்சி முகாம், நேற்று நடந்தது. டயட் விரிவுரையாளர் பானுமதி வரவேற்றார். அமெ-ரிக்கா குளோபல் அகாடமி ஆப் எக்ஸலன்ஸ் பன்னாட்டு ஒருங்கி-ணைப்பாளர்கள் பிரியா யாஸ்மின், மத்தேயு, மங்கையர்கரசி ஆகியோர் பயிற்சியை துவக்கி வைத்தனர். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து பேசியதாவது:தற்போது, தொழிற்சாலைகள், மருத்துவத்துறை, விவசாயம் போன்றவற்றில் ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. செயற்கை நுண்ணறிவும் இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் மனித வாழ்வில் மாற்றங்களையும், முன்னேற்றங்க-ளையும் உருவாக்கி வருகின்றன. ரோபோக்களை இன்ஜினியர்கள் மட்டுமே உருவாக்க முடியும் என்ற நிலையை மாற்றி, ஆசிரியர்க-ளாலும் ரோபோக்களை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், இப்பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, ரோபோக்களை சிக்னல் கொடுத்து மோட்டார்களை இயக்குதல், சென்சார்களை பயன்படுத்துதல், கட்டளையிடும் சர்க்யூட்களை பயன்படுத்துதல், என்னென்ன வேலைகளுக்கு ரோபோக்களை வடிவமைக்கலாம் என்பது உள்பட, 12 செயல்-முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 'பள்ளிகளுக்கு ரோபோ கிட்-டுகள் தேவைப்பட்டால், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வழியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி சங்க தலைவர் பிரபா-கரன் கூறினார். பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ரோட்டரி சங்க நிர்-வாகிகள் சண்முகம், கருணாகர பன்னீர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.
26-Jan-2025