உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஒற்றுமையை வளர்ப்போம்: உறுதிமொழி ஏற்பு

ஒற்றுமையை வளர்ப்போம்: உறுதிமொழி ஏற்பு

ஒற்றுமையை வளர்ப்போம்: உறுதிமொழி ஏற்புமோகனுார், நவ. 5-தமிழக பள்ளிக்கல்வித்துறை, பள்ளி குழந்தைகளின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாதத்தின் முதல் திங்கள்கிழமை தோறும், 'ஒற்றுமையை வளர்ப்போம்' என்ற உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அதன்படி, மோகனுார் தாலுகா, பேட்டப்பாளையம் பஞ்., பனைமரத்துப்பட்டி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தலைமையாசிரியர் ஜோதி தலைமை வகித்தார். பள்ளி மேலாண் குழு தலைவர் வினிதா, உதவியாசிரியர் பாப்பாத்தி, சிறப்பு பயிற்றுனர் ஆனந்தகுமார், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ