உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம்

பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம்

எருமப்பட்டி: போடிநாய்க்கன்பட்டி பஞ்., மண்கரடு கிரா-மத்தில் சுகாதார வளாகம், பல ஆண்டுடாக பூட்-டியே கிடக்கிறது. எருமப்பட்டி யூனியன், போடிநாய்க்கன்பட்டி பஞ்., மண்கரடு பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியி-ருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் சுகாதார வசதிக்காக, கடந்த, 2021ல் துாய்மை பாரத திட்டம் மூலம், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளா-கத்தை, இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், பஞ்., நிர்வாகம் இந்த சுகாதார வளா-கத்தை, மூன்றாண்டாக பராமரிக்காததால், சுகா-தார வளாகம் பயன்படுத்த முடியாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள அங்கன்-வாடியில் படிக்கும் சிறுவர்கள், கழிப்பிட வசதி-யின்றி அவதிப்படுகின்றனர். எனவே, பூட்டி வைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை பயன்-பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி