மேலும் செய்திகள்
மாநகரில் நவீன சிக்னல்கள் அமைக்க போலீசார் திட்டம்
15-Jun-2025
நாமக்கல், நாமக்கல் அடுத்த சிவநாயக்கன்பட்டி குடித்தெருவை சேர்ந்தவர் பிரகாஷ், 35. இவர், காதப்பள்ளியில் பகவதி ஸ்டீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு நிறுவன குடோனில் இருந்து, இரும்பு சேனல்களை, டூவீலரில் மர்ம நபர் திருடி சென்றார்.அதை பார்த்த அக்கம் பக்கத்தினர், மர்ம நபரை பிடித்து, நல்லிபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், நாமக்கல் மட்டப்பாறைபுதுாரை சேர்ந்த ஜெகதீசன், 48, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு சேனல்களையும், திருட்டுக்கு பயன்படுத்திய மொபட்டையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
15-Jun-2025