உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மா மரத்திற்கு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

மா மரத்திற்கு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

சேந்தமங்கலம்; சேந்தமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகு-திகளான ராமநாதபுரம் புதுார், வெண்டாங்கி, கார-வள்ளி, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில், 2,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மா சாகுபடி செய்துள்ளனர். இந்தாண்டு பருவமழை அதிகமாக பெய்ததால் மா மரத்தில் அதிக அளவில் பூ பூக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, மா பூவில் பூச்சி தாக்குதல் இல்லாமல் இருப்பது முக்கியம். அதனடிப்படையில், மா பூவில் பூச்-சிகள் தாக்காமல் இருக்க, மருந்து தெளித்து பாது-காப்பது வழக்கம்.இப்பகுதியில் அதிகளவில் நீலம், கிளிமூக்கு ஆகிய மா வகைகள் அதிகமாக விளைகின்றன. இதை தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்க-ளுக்கும் ஏற்றுமதி செய்துவருகின்றனர். கடந்த டிச.,ல் முதல் முறையாக மருத்து அடிக்கும் பணி நடந்தது. தற்போது இரண்டாம் முறையாக, மா மரங்களுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை