உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாரியம்மன் கோவில் பண்டிகை முகூர்த்தகால் நடுதல் நிகழ்ச்சி

மாரியம்மன் கோவில் பண்டிகை முகூர்த்தகால் நடுதல் நிகழ்ச்சி

மாரியம்மன் கோவில் பண்டிகைமுகூர்த்தகால் நடுதல் நிகழ்ச்சிராசிபுரம், அக். 19-ராசிபுரம், நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் பண்டிகைக்கு முகூர்த்தகால் நேற்று நடப்பட்டது. ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்களிலும் நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து வருகிறது. ஐப்பசி மாதத்தில் மாரியம்மனுக்கு தேர்திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு தேர்திருவிழாவிற்கு வரும், 22ம் தேதி பூச்சாட்டுதல் நடக்கிறது.இதையொட்டி தேர்திருவிழாவிற்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊர் பெரியவர்கள், பக்தர்கள் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர். முன்னதாக நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ