உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பட்டா நிலத்தில் நினைவுக்கல்; இரு தரப்பினரிடையே பேச்சு

பட்டா நிலத்தில் நினைவுக்கல்; இரு தரப்பினரிடையே பேச்சு

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், வேளாங்காடு பகுதியில் ஒரு பிரிவினர், அவர்களது குடும்பங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட இறந்தவர்கள் நினைவாக, மற்றொரு பிரிவை சேர்ந்தவரின் பட்டா நிலத்தில் நினைவுக்கல் வைத்து வழிபட்டு வந்தனர். இதற்கு நில உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். நினைவு கற்களை அகற்றுமாறு போலீசில் புகாரளித்து, அந்த பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் அதே இடத்தில் நினைவுக்கல் வைத்து வழிபடுகிறோம் எனக்கூறி, 75க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதற்கு நில உரிமையாளர் மற்றும் அவரை சேர்ந்தோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குமாரபாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடடத்தினர். இது சம்பந்தமாக, நேற்று தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சிவகுமார் தலைமையில், பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. வெள்ளிக்கிழமைக்கு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை