மனநலம் பாதித்தவர் கிணற்றில் விழுந்து பலி
வெண்ணந்துார், வெண்ணந்துார் அருகே, மனநலம் பாதித்த வாலிபர் கிணற்றில் விழுந்து இறந்துள்ளார்.வெண்ணந்துார் அடுத்த ஓ.சவுதாபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ், 40. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். நேற்று முன்தினம் இரவு, வீட்டை விட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. தங்கராஜை உறவினர்கள் தேடினர். அப்போது, அங்குள்ள கிணற்றில் விழுந்தது தெரியவந்தது. உடனடியாக உறவினர்கள் கிணற்றில் இறங்கி, தேடியபோது அவர் நீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது. தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது குறித்து, வெண்ணந்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.