மேலும் செய்திகள்
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு போட்டி
15-Jun-2025
ராசிபுரம், சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ராசிபுரம் அருகே மினி மாரத்தான் போட்டி நடந்தது. சர்வதேச போதை பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான நாளாக, நேற்று அனுசரிக்கப்பட்டது. கல்லுாரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களிடையே போதை பொருட்கள் பயன்படுத்துவதால், ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ராசிபுரம் அடுத்த ஏ.கே.சமுத்திரம் பகுதியில், போலீசார் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி கொடியசைத்து துவக்கி வைத்தார். 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாரத்தான் போட்டி ஏ.கே., சமுத்திரம் பகுதியில் தொடங்கி கொழிஞ்சிபட்டி, குமாரபாளையம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, 5 கி.மீ., துாரம் சென்றது.போதை பொருட்கள் பயன்படுத்துவதால், ஏற்படும் விளைவுகள், சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதி மொழி ஏற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு இன்ஸ்பெக்டர் கோமதி, பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
15-Jun-2025