உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தானியங்கி பால்பதன இயந்திரம் நிறுவும் பணி: அமைச்சர் துவக்கம்

தானியங்கி பால்பதன இயந்திரம் நிறுவும் பணி: அமைச்சர் துவக்கம்

மோகனுார்: நாமக்கல் மாவட்டத்தில், 2024 அக்., 22ல் முதல்வர் ஸ்டாலின், தானியங்கி நவீன பால்பண்ணை கட்ட அடிக்கல் நாட்டி பணி-களை துவக்கி வைத்தார். இயந்திரங்கள் கொள்முதல் செய்து நிறுவும் பணி நேற்று தொடங்கியது. எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகரட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், 90 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும், அதிநவீன தானியங்கி பால்பதன ஆலைக்கான இயந்தி-ரங்கள் நிறுவும் பணியை தொடங்கி வைத்தார்.'பால் பண்ணை அமைக் கும் பணி முழுமையாக நிறைவு செய்-யப்பட்டு, இதற்கான சோதனை ஓட்டம், வரும் நவ.,ல், மேற்-கொள்ளப்பட்டு, டிசம்பருக்குள் அனைத்து பணிகளும் முடிவு பெறும்' என, நாமக்கல் ஆவின் பால்பண்ணை கட்டுமான பணியை மேற்கொண்டு வரும், தேசிய பால்வள வாரிய அலுவ-லர்கள் தெரிவித்தனர்.மாநகராட்சி துணை மேயர் பூபதி, கால்நடை மருத்துவ கல்-லுாரி முதல்வர் செல்வராஜ், ஆவின் பொது மேலாளர் சண்முகம், பால்வளம் துணைப்பதிவாளர் சண்முகநதி, மோகனுார் அட்மா தலைவர் நவலடி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ