உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 850 மகளிர் குழுவினருக்கு ரூ.79.96 கோடியில் வங்கி கடன்: அமைச்சர் மதிவேந்தன் வழங்கல்

850 மகளிர் குழுவினருக்கு ரூ.79.96 கோடியில் வங்கி கடன்: அமைச்சர் மதிவேந்தன் வழங்கல்

நாமக்கல் நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில், 850 மகளிர் சுய உதவி குழுவினருக்கு, 79.96 கோடி ரூபாய் மதிப்பில், வங்கி கடன் உதவியை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.சேலத்தில் நடந்த விழாவில், துணை முதல்வர் உதயநிதி, தமிழகம் முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 3,500 கோடி ரூபாய் வங்கிக்கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகளை வழங்கி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, நாமக்கல்லில் மகளிர் சுய உதவி குழுவினருக்ருக்கு கடன் உதவி வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தின், மாநில ஊரக நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் சார்பில், 850 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 79.68 கோடி ரூபாய் மதிப்பில் வங்கி கடன் இணைப்பு உட்பட பல்வேறு கடனுதவிகள், 1,500 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசியதாவது:தமிழக அரசு, மகளிர் குழுவினர் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நாமக்கல் மாவட்டத்தில், 775 மகளிர் குழுக்களுக்கு, 76.96 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 159 குழுக்களை சேர்ந்த, 1,500 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், 25 கிலோ வரை சுய உதவிக்குழு பொருட்களை, அரசு டவுன் பஸ் மற்றும் மப்சல் பஸ்களில் இலவசமாக எடுத்துச்செல்லலாம்.கோ--ஆப்டெக்ஸ் துறையில் பொருட்கள் வாங்கும்போதும், ஏற்கனவே உள்ள தள்ளுபடிகளுக்கு மேல், 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள இ--சேவை மையங்களிலும், 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ